இராமநாதபுரம் மாவட்டத்தில் கணிப்பாய்வு அலுவலர் பல்வேறு இடங்களில் ஆய்வு!!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர்,தலைமைச்செயல் அலுவலர் டாக்டர் மா.வள்ளலார் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இந்த ஆய்வின்போதுமாவட்ட கணிப்பாய்வு அலுவலர் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினை பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் நகர் வெளிப்பட்டினம் நியாய விலை கடை மற்றும் ஆர்.எஸ். மங்கலம் வட்டம்,ஆவரேந்தல் ஊராட்சியில் உள்ள நியாயவிலை கடைக்கு சென்று குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருட்கள் விபரம் குறித்தும் மற்றும் பதிவேடுகள்,பொருள்களின் இருப்பு விவரம் குறித்தும் ஆய்வு செய்வதுடன் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருள்கள் வழங்கும் விபரம் குறித்து கேட்டறிந்துடன் பதிவேடுகளை பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி உணவுப் பொருட்கள் வழங்கும் வகையில் போதிய அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என பணியாளர்களுக்கு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், பொட்டக்கோட்டை மற்றும் பணிக்கோட்டை ஊராட்சி மற்றும் இராமநாதபுரம் வட்டம்,அச்சுந்தன்வயல் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினை பார்வையிட்டு அதன் தரம் குறித்து கணிப்பாய்வு அலுவலர் டாக்டர் மா.வள்ளலார் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.திவ்யா ஷீன்கம்,துணைப்பதிவாளர் (பொ.வி.தி) ராஜகுரு,தனி வட்டாட்சியர் (குடிமைப் பொருள் வழங்கல்) பழனிக்குமார்,கூட்டுறவுச் சார்பதிவாளர் (பொ.வி.தி) பிரகாஷ் ராகுல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



