இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு!!!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரமக்குடி வட்டம், இடையார் குடியிருப்பு,பரமக்குடி நகராட்சி,அம்பேத்கார் நகர் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கீட்டு படிவம் வழங்கியதை பார்வையிட்டதுடன்,வாக்காளர்களிடம் படிவம் பூர்த்தி செய்வதன் விவரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் வாக்காளர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் முழுமையாக கேட்டறிந்து பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது பரமக்குடி வட்டாட்சியர் வரதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



