தமிழகம்மாவட்டச் செய்திகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 2025 மாதத்தில் 08.11.2025 சனிக்கிழமை அன்று கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம்- இராமநாதபுரம் உள்வட்டம்- சக்கரக்கோட்டை (நியாயவிலைக்கடை) / இராமேஸ்வரம் வட்டம் – இராமேஸ்வரம் உள்வட்டம் அரியாங்குண்டு (நியாயவிலைக்கடை) /திருவாடானை வட்டம் திருவாடானை உள்வட்டம் பாண்டுகுடி (நியாயவிலைக்கடை)/பரமக்குடி பார்த்திபனூர் உள்வட்டம் சூடியூர் (நியாயவிலைக்கடை)/முதுகுளத்தூர் வட்டம் தேரிருவேலி உள்வட்டம் வளநாடு (நியாயவிலைக்கடை) / கடலாடி வட்டம் சாயல்குடி உள்வட்டம் -கன்னிகாபுரி (புயல்காப்பாக கட்டிடம்) / கமுதி வட்டம் கமுதி கிழக்கு உள்வட்டம் கமுதி டவுன் (நியாயவிலைக்கடை)/ கீழக்கரை வட்டம்- கீழக்கரை உள்வட்டம்- மருதன் தோப்பு (நியாயவிலைக்கடை)/ ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் ஆர்.எஸ்.மங்கலம் உள்வட்டம் புல்லமடை (நியாயவிலைக் கடை) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/ மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் நியாயவிலைக்கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 09 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எதிர்வரும் 08.11.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ள குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button