தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகள்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் தாள் I 15.11.2025 தேதியிலும், தாள் II 16.11.2025 அன்றும் நடைபெறவுள்ளது.இத்தேர்வுகளை எழுதவுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று காலை 8.30 மணிக்கு சம்மந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும்.தேர்வு எழுத கருப்பு நிறம் கொண்ட பந்துமுனை பேனா,ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட நுழைவுச்சீட்டு,அடையாளச் சான்றுகளுக்கு ஆதாரமாக கடவுச்சீட்டு,ஆதார்,ஓட்டுநர் உரிமம்,பான் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் அசல் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டில் புகைப்படம் தெளிவாக இல்லை எனில் மூன்று பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோவினை கொண்டு வந்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.தேர்வுக்கு வருகைத் தரும் விண்ணப்பதாரர்கள் 8.30 மணிக்குள்ளாக தேர்வு மையத்திற்கு வருகை தர வேண்டும்.9.30 மணியளவில் தேர்வு மையத்தின் நுழைவு வாயில் பூட்டப்படும்.அதன் பின்னர் வரும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



