மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் உணவுத் திருவிழா மற்றும் குழந்தைகள் தின விழா!!!

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஓம் சக்தி நகரில் உணவு திருவிழா மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்விற்க்கு மண்டபம் வட்டார கல்வி அலுவலர் பாலாமணி தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோவிந்தராஜன்,அலுவலக கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் வீரஜோதி,மாவட்டக் கல்வி அலுவலக ஊழியர்கள் முனீஸ்வரன்,கார்த்திக் ,எஸ்.எம்.சி தலைவர் விமலா,பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் காயத்ரி, இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் லெட்சுமி மற்றும் மதிய உணவுத் திட்ட அமைப்பாளர் செல்வராணி இந்திரா காலை உணவுத்திட்ட பணியாளர்கள் அழகுசுந்தரி,புவனா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் இராபர்ட் ஜெயராஜ்,ஆசிரியர்கள் பேபி சுகன்யா,சாமுண்டீஸ்வரி,மார்க் ரேட் ஏஞ்சலின்,கவிதா மற்றும் சென்னை சர்தா மானு அறக்கட்டளையின் ஆசிரியர் சிந்துஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.



