இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள்,விதவைகள் குறைபாடுகளை களைய சிறப்பு முகாம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள் தங்களின் SPARSH PPO மற்றும் SPARSH updation SPARSH குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள CDA சென்னை மூலம் SPARSH OUTREACH PROGRAMME வருகின்ற 18-11-2025 தேதி காலை 9.30 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை அருகில் உள்ள YAFA மஹாலில் நடைபெறவுள்ளது. இதில் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்கள் ஆதார் கார்டு, PAN கார்டு, மின்னஞ்சல் முகவரி, கைபேசிஎண், அசல் படைவிலகல் சான்று (Discharge book), ஓய்வூதிய ஆணை நகல் (PPO), ESM / Widow அடையாளஅட்டை, ஓய்வூதியம் பெறும் வங்கிக் கணக்குப் புத்தகம், புகைப்படம் ஆகிய தெரிவிக்கப்படுகிறது. ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு
மேலும் விபரமறிய உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலஅலுவலகம், இராமநாதபுரம் தொலைபேசி எண்: 04567-230045 -ஐ என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



