இராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம்:மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 01.01.2026-ஐத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கணக்கீட்டு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் 04.11.2025 முதல் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் 04.12.2025 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மீளப் பெறப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, கணக்கெடுப்பு படிவம் தொடர்பாக வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இம்மையங்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் (15.11.2025 மற்றும் 16.11.2025) இயங்கும். சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு கீழ்காணும் தொலைபேசி/அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலக உதவி மைய விபரம்: 01.209 பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர், பரமக்குடி 04564 224151, 9445000473, 02.210 திருவாடானை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் / மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர். இராமநாதபுரம் 04567 230506, 9445000362, 3.211-இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர், இராமநாதபுரம் 9445000472, 9843648049, 04.212 -முதுகுளத்தூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், இராமநாதபுரம் 94454 77843, 7010748024
உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலக உதவி மைய விபரம்: 01.உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் அலுவலகம், இராமநாதபுரம் 7010697813, 02.உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் அலுவலகம் திருவாடானை. 6380012909, 03.உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் அலுவலகம் இராமேஸ்வரம் 9361148983, 04.உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் அலுவலகம், ஆர்.எஸ்.மங்கலம் 8344590587, 05.உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் அலுவலகம், கீழக்கரை 8300036834, 06.உதவி வாக்காளர் பதிவு அலுவலர்/வட்டாட்சியர் அலுவலகம் பரமக்குடி 8778318847, 07.உதவி வாக்காளர் பதிவு அலுவலர்/வட்டாட்சியர் அலுவலகம், கமுதி 8110852028, 08.உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் அலுவலகம், முதுகுளத்தூர் 7397522085, 09.உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் அலுவலகம், கடலாடி 9047801899, 10.உதவி வாக்காளர் பதிவு அலுவலர் நகராட்சி ஆணையர், இராமநாதபுரம் 8056865080, 11.உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / நகராட்சி ஆணையர், பரமக்குடி 984380900.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



