தமிழகம்மாவட்டச் செய்திகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு:பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!! 

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, கிராமப்புற பெண்கள்,இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது

குறிப்பாக, 2025-26 ஆம் ஆண்டில் கிராமப்புற இளைஞர்களில் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு, பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பும், சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளும் 42,000 இளைஞர்களுக்கு வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதுஇத்தகைய திறன் பயிற்சி திட்டங்களின் மற்றுமொரு முயற்சியாக சமுதாய திறன் பயிற்சி பள்ளி (Community Skill School) எனும் புதிய அணுகு முறையுடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் என்பது, உள்ளூர் அனுபவிக்க நிபுணர்களையே முதன்மை பயிற்றுநர்களாக கொண்டு, தங்கள் சொந்த கிராமங்களில் உள்ள சமுதாய உறுப்பினர்களுக்கு தங்கள் கள அறிவை நேரடியாகப் பகிர்ந்து கொள்ளும் முறையாகும். இத்தகைய சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் வாயிலாக கொத்தனார், எலக்ட்ரீசியன், இரு சக்கர வாகன பழுது பார்ப்பு, ஏ.சி மெக்கானிக், ஆரி எம்ராய்டரிண, வாகன ஓட்டுநர் உரிமம், சூரிய ஒளி பலகை நிறுவுதல், அழகு நிலையம் மேலாண்மை போன்ற 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டில் மாநிலம் முழுவதும் 2,500 சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் வாயிலாக 50,000 பயனாளிகளுக்கு CSS மூலம் ரூ.25 கோடி செலவினத்தில் பயிற்சி வழங்கி வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது.கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் குடும்பத்தை சேர்ந்த 18 முதல் 45 வயது வரையிலான ஆண், பெண் இருப்பாலர்களும் பயன் பெறும் வகையில் உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய திறன் பயிற்சி பள்ளிகள் மூன்று கட்டங்களாக வரும் 20.11.2025, 01.12.2025 மற்றும் 10.12.2025 ஆகிய நாட்களில் துவங்கப்பட்டு விரிவுபடுத்தப்பட உள்ளது.இலவசமாக,உள்ளூரிலேயே, குறுகிய காலத்தில்,பகுதி நேரமாக வழங்கப்படும் இத்தகைய திறன் பயிற்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பயனாளிகள், இராமநாதபுரம் மாவட்டத்தின் திட்ட இயக்குநர்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வட்டார இயக்க மேலாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button