இராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவின் சிறுதானிய உணவகம்:மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!!!

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவின் சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மூலம் மகளிர் சுயஉதவி குழுவால் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவங்கப்பட்டுள்ளது.இந்த சிறுதானிய உணவகத்தில் கம்பங்கூழ், ராகிகூழ், சூப்பு வகைகள், சிறுதானிய சாத வகைகள், சத்து மாவு வகைகள், சிறுதானிய லட்டு வகைகள், பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சிறு தானிய உணவுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதேபோல்,இராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கேணிக்கரை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சிறுதானிய உணவகம் செயல்பட்டு வருகின்றன. அதைப்போல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சிறுதானிய உணவகம் செயல்பட்டு வருகிறது.பொதுமக்கள் சிறுதானிய உணவகத்தை பயன்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார மகளிர் திட்ட இயக்குநர் பாபு,உதவி திட்ட அலுவலர்கள் ராஜா முஹம்மது,தங்கபாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



