இராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்,தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி (DDU-GKY) திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 45 வயது வரையுள்ள ஆண்,பெண் இருபாலர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையுடன் இணைந்து வருகின்ற 21.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை இராமநாதபுரம், டி.பிளாக் அருகில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து இளைஞர்கள் மற்றும் மகளிர் கலந்து கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வித் தகுதி பெற்ற இளைஞர்கள் (ஆண்/பெண் இருபாலர்) கலந்து கொள்ளலாம்.
இதில் இளைஞர்கள் மற்றும் மகளிர் தங்களுடைய கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொண்டு தங்களுக்கேற்ற வேலைவாய்ப்பினை தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, வேலைவாய்ப்பு பெற விரும்பும் நபர்கள் தவறாது இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



