இராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தீவிரம்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்வது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெற்று வருகின்றது.04.11.2025 முதல் வாக்காளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு,வாக்காளர்களிடம் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து மீளப் பெறும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ள படிவங்களை சிரமமின்றி பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உரிய வழிகாட்டுதலுடன் பணி நடைபெற்று வருகிறது.விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு உரிய விவரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கிட்டு படிவத்தை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாக 2002 சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் உரிய பதிவேடு மற்றும் கைபேசியில் இணையதளம் மூலமாக ஆவணங்கள் சேகரித்து வைக்கப்படுகிறது. எனவே வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை எளிய முறையில் பூர்த்தி செய்து விரைவில் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.



