இராமநாதபுரத்தில் நாளை ஸ்பார்ஸ் ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம்:இந்திய பாதுகாப்பு கணக்குகள் சேவை கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் பேட்டி!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்பார்ஸ் ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம் குறித்து இந்திய பாதுகாப்பு கணக்குகள் சேவை கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முப்படை ராணுவம் கடற்கரை விமானப்படை ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காண ஒரு மாபெரும் ஸ்பார்ஸ் ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம் இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள யாஃபா மஹாலில் 9.30 மணி முதல் 6.00 மணி வரை நடைபெற உள்ளது.இந்த முகாமில் உயிர் சான்று அடையாளம் காணுதல்,ஸ்பார்ஸ் ஓய்வூதியத்தில் பெயர் மற்றும் இதர தகவல்களை செலுத்துதல்,ஓய்வூதியத் தொகை திருத்துதல்,ஆதார் புதுப்பித்தல்,ஓ.ஆர்.ஓ.பி குறைகள் நிவர்த்தி செய்தல்,பாதுகாப்பு குடும்ப ஓய்வூதியத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல் என பல்வேறு பணிகளுக்காக தனித்தனியே ஸ்டால்கள் அமைக்கப்பட்டு ஓய்வூதிய சேவைகள் வழங்கப்படவிருக்கின்றன. மேலும் இம்முகாமில் பல்வேறு முப்படை ஆவண அலுவலகங்கள் (Record Offices) அனைத்து வங்கிகள் ஆகியவற்றின் அலுவலர்கள் பங்கு பெறவிருக்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உட்பட பலர் உடன் உள்ளனர்.



