இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் தெரிந்துகொள்ள இணையதள முகவரி வெளியீடு:மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 01.01.2026-ஐ
தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு,வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த வாக்காளர்கள் கடந்த 2002
சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் தங்களது உறவினர் பெயர்
இடம் பெற்ற விவரத்தினை கீழ்கண்ட இணையதள முகவரி வாயிலாக அறிந்து கொள்ளலாம். இணையதளத்தில் தேடுதலின் போது வாக்காளரின் பெயர் மற்றும் விவரங்கள் தமிழில் தட்டச்சு செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
196- திருவாடானை தொகுதி
https://ramanathapuramelectors.vercel.app/?tsc=AC196
200 – பரமக்குடி தனி தொகுதி
https://ramanathapuramelectors.vercel.app/?tsc=AC200
201 – ராமநாதபுரம் தொகுதி
https://ramanathapuramelectors.vercel.app/?tsc=AC201
202 – கடலாடி தொகுதி
https://ramanathapuramelectors.vercel.app/?tsc=AC202
203 – முதுகுளத்தூர் தொகுதி
https://ramanathapuramelectors.vercel.app/?tsc=AC203
ராமநாதபுரம் மாவட்டம் முழுமைக்கும்
https://ramanathapuramelectors.vercel.app/
இப்பணியினை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவு செய்ய
வேண்டியுள்ளதால்,வாக்காளர்கள் இந்த வசதியினை பயன்டுத்தி தங்களது சிறப்பு தீவிர திருத்த வாக்காளர கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து,வாக்குச் சாவடி நிலை அலுவலரால் கணக்கீட்டு படிவங்கள் சேகரிக்க வரும்பொழுது தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



