இராமநாதபுரத்தில் வெப்ப அலை தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்:கலெக்டர் தலைமையில் நடந்தது!!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் வெப்ப அலை தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வெப்ப அலை தாக்கம் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுச்சுழல் துறை மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை,பொதுப்பணித்துறை,மருத்துவத்துறை,வனத்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வெப்ப அலை காலத்தில் பாதுகாப்புடன் இருந்திடுவதற்கு எதுவாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் சுற்றுச்சுழல் குழு அலுவலர் சபரிஷா,மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து கழுவன்,பேரிடர் மேலாண்மை தாசில்தார் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



