கறார் காட்டிய மாணவியின் தந்தை கதி கலங்கிய ஓட்டம் பிடித்த தி.மு.கவினர்:எங்களுக்கு நிதி வேண்டாம் நீதிதான் வேண்டும்:ஆறுதல் சொல்லப் போன இடத்தில் அசிங்கப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ!!!

இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரத்தை நேற்று உலுக்கிய,ஒருதலைக் காதலை மறுத்த 12-ம் வகுப்பு மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில்,இன்று சம்பவம் நடந்த இடத்திற்கு,பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக,இராமநாதபுரம் தி.மு.க. மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ சென்றிருந்தார்.
மாணவியின் குடும்பத்தாரைச் சந்தித்த எம்.எல்.ஏ.,வழக்கம்போல ஆளும் கட்சியின் சார்பில் “கிளிப்பிள்ளை பாடம்” படிக்க ஆரம்பித்தார். ”அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் கொலையாளிக்கு நிச்சயம் மரண தண்டனை வாங்கித் தருவார். நீங்கள் எங்கள் அரசை நம்பணும்,” என்று அவர் அடுக்கிக்கொண்டே போக…
திடீரென குறுக்கிட்ட கொலையான மாணவியின் தாயார்,எம்.எல்.ஏவின் முகத்திற்கு நேராக, “இப்படித்தான் காலம் பூரா சொல்றிய, ஆனா ஒரு நடவடிக்கையும் காணோம்,” என்று அனல் கக்கினார்.
அங்கிருந்த மக்கள் மத்தியிலும்,அதிகாரிகளின் மத்தியிலும் இந்த வார்த்தைகள் எம்.எல்.ஏவின் பேச்சுக்கு கிடைத்த மரியாதையைத் தூக்கி குப்பையில் போடும் விதமாக அமைந்தது.ஆளும் கட்சி நிர்வாகத்திற்குக் கிடைத்த அப்பட்டமான அவமானம் இது.
இதையடுத்து,கொலையான மாணவியின் தந்தையும், “எங்களுக்கு நீங்கள் தரும் நிதி உதவி எதுவும் வேண்டாம்,எங்களுக்கு நீதிதான் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கறாராக வலியுறுத்தினார்.அவரது இந்த அழுத்தமான கோரிக்கை, அங்கு குழுமியிருந்த ஆளும் கட்சியினரை மேலும் நிலைகுலைய வைத்தது.

மரண தண்டனை,தி.மு.க அரசு என்று சவடால் அடித்த ஆளும் கட்சி எம்.எல்.ஏவும்,அவரது சகாக்களும் மக்கள் தங்கள் முகத்திரை கிழித்தெறியப்பட்டதால், ‘இனி இங்கே நிற்க வேண்டாம்’ என்ற முடிவுக்கு வந்தனர்.நீதியைக் கேட்ட பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினரின் கோபத்தில் இருந்து தப்பிக்க, “துண்டைக் காணோம் துணியைக் காணோம்” என்று அங்கிருந்து ஆளும் கட்சியினர் கிளம்பிச் சென்றனர்.
ஆறுதல் சொல்லப் போன இடத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வுக்கு நேர்ந்த இந்த அவமானம், தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு மற்றும் நீதி வழங்குவதில் உள்ள மெத்தனத்தின் மீதான மக்களின் ஒட்டுமொத்தக் கோபத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.



