மானாங்குடியில் கூட்டுறவுத்துறை மூலம் பனை விதைகள் நடவு செய்யும் பணி:கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்!!!

இராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் ஊராட்சி ஒன்றியம்,மானாங்குடி கடற்கரை பகுதியில் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூட்டுறவுத்துறையின் மூலம் பனை விதைகளை நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கூட்டுறவுத்துறையின் சார்பாக 72-வது கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அதன் தொடர்ச்சியாக நிறைவு நாளான இன்று மண்டபம் ஊராட்சி ஒன்றியம், மானாங்குடி கடற்கரை பகுதியில் 10000 பனை விதைகளை நடவு செய்யும் பணிகள் நடைபெற்றது.
மரங்கள் காற்று மாசுபாட்டை குறைக்கவும்,மண் அரிப்பை கட்டுப்படுத்தவும்,மண் வளத்தை மேம்படுத்தவும்,நிலத்தடி நீரினை அதிகரிக்கவும் உதவி புரிகின்றன.பனை மரத்திலிருந்து பெறப்படும் உணவுப்பொருட்கள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது.மாவட்ட கலெக்டர் பனை விதைகளை நடவு செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜினு,இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் இராஜலட்சுமி மற்றும் கூட்டுறவுத்துறை அலுலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



