இராமேஸ்வரம் மாணவி கொலை வழக்கு:பா.ம.க சார்பில் நிதி மற்றும் நீதி வேண்டி கலெக்டர்,போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் மனு:நிதி மற்றும் நீதி கிட்டா விடில் உண்ணாவிரதப் போராட்டம்:பா.ம.க மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் பேட்டி!!!

இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் பள்ளிக்குச் சென்ற மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் இராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தகவல் தெரிந்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.திமுக ஆட்சியில் சமூக விரோதிகளை தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனவும்,மாணவி கொடூரமாக கொல்லப்பட்டதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும்,தி.மு.க ஆட்சியில் பொறுப்பேற்றதில் இருந்து பெண்கள் குழந்தைகள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் குறிப்பிட்டது மட்டுமின்றி மாணவியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.ஒருபுறம் கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமையிலான பா.ம.க நிர்வாகிகள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பா.ம.க இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நேற்று இராமேஸ்வரத்தில் படுகொலை செய்யப்பட்ட சேராங்கோட்டை மாணவி ஷாலினி குடும்பத்தினரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆணைக்கிணங்க நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.அதே சமயம் எங்கள் கட்சியின் கொறடா மயிலம் தொகுதி எம்.எல்.ஏ C.சிவக்குமார் எனது கைப்பேசியில் தொடர்பு கொண்டு கொலையுண்ட மாணவியின் தந்தையிடம் ஆறுதல் கூறியதோடு,பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும் என்றார்.மேலும் மாணவியின் உறவினர்கள் எங்களிடம் இராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் பள்ளி மாணவிகள் சென்று வர போதிய பேருந்து வசதி இல்லை,அப்பகுதியில் மேல்நிலைப்பள்ளி அமைத்து தருவதாக ஆசிரியர்கள் சிலர் ஊர் முழுவதும் வசூல் செய்தனர்.3 வருடங்களாகியும் மேல்நிலைப்பள்ளி அமைத்து தரவில்லை.இதையெல்லாம் செய்திருந்தால் எங்களுடைய மகளை நாங்கள் இன்று இழந்திருக்க மாட்டோமே என்று எண்ணத் தோன்றுகிறது.மேலும் சேராங்கோட்டை பகுதி முழுவதும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுகிறது.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எளிதில் குடிகாரர்களாகும் வகையில் சர்வசாதாரணமாக மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது.இதையெல்லாம் தடுத்து நிறுத்தியிருந்தால் என் மகளின் மரணம் நிகழ்ந்திருக்காது.குற்றவாளி முனியராஜீக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றெல்லாம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி தற்போது பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்துள்ளோம்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிய அரசு இராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி ஏன்? வழங்கவில்லை பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆணைக்கிணங்க இராமநாதபுரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பசுமைத்தாயகம் மாநில துணைச்செயலாளர் கர்ணமஹாராஜன்,பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் திருப்பாலை முனியசாமி,மாவட்ட பொருளாளர் ராஜாமணி,கீழக்கரை நகர் செயலாளர் லோகநாதன்,முன்னாள் மாவட்ட தலைவர் ஜீவா,மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சார்லஸ்,இளைஞர் சங்க செயலாளர் பிரவீன்குமார்,இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் கார்த்திக்,மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தும் கான்,மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் பிரவீன் குமார்,மாவட்ட மாணவர் சங்க தலைவர் கபிஸ் ராஜ்,திருவாடானை தொகுதி செயலாளர் காதர்ஷா,ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தலைவர் பஷீர்,ஒன்றிய செயலாளர் நாகேந்திரன்,திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் இபுராஹிம் உட்பட பாட்டாளி மக்கள் கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.



