தொண்டி செய்யது முஹம்மது அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா:முன்னாள் மாணவர் தொண்டி சாதிக் பாட்சா பங்கேற்பு!!!

இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி செய்யது முஹம்மது அரசு மேல் நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் பள்ளி விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் அருள் பிரகாசம் தலைமை வகித்தார்.பள்ளி ஆசிரியர் காலிராஜ் வரவேற்புரை ஆற்றினார்.பள்ளி தூதுவர் முன்னாள் மாணவர் பொறியாளர் அபுபக்கர்,முன்னாள் மாணவர் தொண்டி சாதிக்பாட்சா,தொண்டி பேரூர் தலைவர் சார்பில் நவ்பல் ஆதம்,இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜசேகர்,இஸ்மத் நானா,ம.ம.க கவுன்சிலர் பெரியசாமி கவுன்சிலர் மஹ்ஜபில் சல்மா,ஆசிக்,எஸ்.எம்.சி தலைவர் ஹமீது பாத்திமா,அலெக்சாண்டர் ஆகியோர் பள்ளி விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கைப்பந்து போட்டியில் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றவர்களுக்கு சீருடை சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

உடற்கல்வி இயக்குனர் ஆரோக்கியதாஸ்,சிவா ஆகியோருக்கு தொண்டி மக்களின் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.வழக்கறிஞர் ஜிப்ரி,சங்கர்,பாதுஷா,முஹம்மது மைதீன்,ஹாக்கிப் அலாவுதீன் உட்பட முன்னாள் மாணவர்கள்,பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.



