இராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த உதவி மையம்:பொதுமக்கள் பயன்பெற மாவட்ட தேர்தல் அலுவலர்/கலெக்டர் அழைப்பு!!!

இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது.வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்பப் பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நேர்வில்,இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 800 வாக்குச் சாவடி அமைவிடங்களில்,தன்னார்வலர்கள் மூலமாக கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்து மீள பெறுவதற்காக,வருகின்ற 22.11.2025 மற்றும் 23.11.2025 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களிலும் உதவி மையம் செயல்பட உள்ளது.பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



