இராமநாதபுரத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்:கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது!!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக 04.11.2025 அன்று துவங்கி 04.12.2025 வரை இப்பணி நடைபெறுகின்றன இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வாக்காளர்களால் பூர்த்தி செய்து திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் தன்னர்வலர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.இவர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்வதற்கு உறுதுணையாக இருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றும் செய்திடும் வகையில் உதவிட வேண்டும்.மேலும் வாக்காளர்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக 22.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய தேதிகளில் உதவி மையங்கள் செயல்படுகின்றன.அவற்றை பயன்படுத்திட உதவிட வேண்டும்.வாக்காளர் பட்டியல் திருத்தம் முடிந்து வெளியிடும் பொழுது மாவட்டத்தில் வாக்காளர்களின் பெயர் விடுபடாத வகையில் கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து அனைத்து வாக்காளர்களும் திரும்ப வழங்கிடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன்,மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து கழுவன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



