தமிழகம்மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரத்தில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!!!

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் வினோத் குமார் தலைமை வகித்தார்.18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் முனியசாமி பேசினார்.பதவி உயர்வு வழங்க வேண்டும்.காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,பணிச்சுமையை குறைக்க வேண்டும்,உரிமம் பெற்ற நில அளவையர்களை பணி அமர்த்துவதை தடுக்க வேண்டும்,ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்,நகராட்சிகளுக்கு புதியதாக உருவாக்கிய நகர சார் ஆய்வாளர் பணியிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



