இராமநாதபுரத்தில் முன்னாள் படைவீரர் அலுவலகத்திற்கு அலுவலக உதவியாளர் பணி:விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு!!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
உதவி இயக்குநர்,முன்னாள் படைவீரர் நல அலுவலகம்,இராமநாதபுரம் அலுவலகத்திற்கு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 01 காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர் பட்டியல் (ST) பழங்குடி இனத்தவராக இருத்தல் வேண்டும்.8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.மிதிவண்டி ஒட்டத் தெரிந்த 42 வயதிற்குட்பட்ட நபராக இருத்தல் வேண்டும்.எனவே தகுதியும்,விருப்பமும் உள்ள நபர்கள் இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரில் அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.விண்ணப்பத்தினை www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை இணை இயக்குநர்,முன்னாள் படைவீரர் நல இயக்ககம், 22, இராஜா முத்தையா சாலை,சென்னை-600003 என்ற முகவரிக்கு 30.11.2025 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்கப்பெறுமாறு சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரம் அறிய உதவி இயக்குநர்,முன்னாள் படைவீரர் நல அலுவலகம்,இராமநாதபுரம் மாவட்டம் தொலைபேசி எண்: 04567-230045 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



