இராமநாதபுரத்தில் மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் கைவினை பொருட்களின் கண்காட்சி:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்-பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற கண்காட்சி குழுவினர் அழைப்பு!!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் ராம்நாட் பனை ஒலை உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் கைவினை கலைஞர்களின் கைவினை பொருட்கள் கண்காட்சி நேற்று 21.11.2025 முதல் 30.11.2025 வரை 10 நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இராமநாதபுரத்தில் ஜி.எஸ்.எம் மால் அருகில் உள்ள யாதவா மஹாலில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு தலைமையேற்று துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மத்திய அரசு ஜவுளி அமைச்சகம் உதவி இயக்குநர்,கைவினைப் பொருட்கள் சேவை மையம், நாகர்கோவில் எஸ்.வீனா,இராமநாதபுரம் துணை இயக்குநர் (வேளாண்மை வணிகம்) எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் கே.அருண்குமார் (டி.டி.எம்),மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன்,உழவர் சந்தை உதவி நிர்வாக அதிகாரி எஸ்.அண்ணாத்துரை,ஐசிஐசிஐ வங்கி பிராந்திய தலைவர் (விற்பனை) கணேஷ் பாஸ்கர்,இராமநாதபுரம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமை மேலாளர் விஜிலன்,கரூர் வைஸ்யா பேங்க் உயர் மேலாளர் வி.சதீஷ் குமார்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் இராமநாதபுரம் பனை ஓலை உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் பரமக்குடி கல்யாணி கார்த்திகேயன் நன்றி கூறினார்.

பல்வேறு வகையான கைவினை பொருட்களுக்கான 20 பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தியாவின் தலைசிறந்த கைவினை கலைஞர்களின் நேரடி விற்பனை நடைபெறும்.அனைவரும் வருகை தந்து பயன் பெறுமாறு கண்காட்சி குழுவினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



