தொண்டி அருகே கைக்கு எட்டும் தூரத்தில் மின் கம்பி:நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மங்களக்குடியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மின் கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது.அசம்பாவிதம் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி அருகே உள்ள மங்களக்குடி கிராமத்தில் பள்ளிவாசல் அருகில் உள்ள டிரான்ஸ்பர்மரில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகள் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கை உயர்த்தி தொடும் அளவிற்கு உள்ளது.பள்ளிவாசல் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருப்பதால் ஒரு வித அச்சத்துடன் இப்பகுதி மக்கள் உள்ளனர்.உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க மங்களக்குடி த.மு.மு.க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து த.மு.மு.க ஒன்றிய நிர்வாகி கைம் கூறியதாவது:-
இங்குள்ள டிரான்ஸ்பார்மர் ஜம்பர் கனெக்சன் மற்றும் பீஸ் ஆகியவைகள் தொடும் அளவிற்கு உள்ளன.இதில் ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாகவே மின்வாரிய அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்றார்.



