இராமநாதபுரத்தில் ம.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்:புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ பங்கேற்பு!!!

இராமநாதபுரம் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் பாரதிநகர் தனியார் மஹாலில் நடந்தது.துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மதுரை தெற்கு ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன்,மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ் ஆகியோர் பேசினர்.

மது,போதைப்பொருள் பயன்பாடு தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலையில் வரும் 2026 ஜன.2-ல் மது ஒழிப்பு பிரசார சமத்துவ நடைபயணம் நடைபெற உள்ளது.
ஜன.2-ல் திருச்சியில் துவங்கும்.இந்நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.ஜன 12-ல் மதுரையில் நிறைவடையும்.நிறைவு நாள் நிகழ்வில் நடிகர் சத்யராஜ்,கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.இதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பது எனவும்,2026 சட்டமன்ற தேர்தலுக்கு தாராளமாக நிதி வழங்குவதும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மீனவரணி செயலாளர் பேட்ரிக்,தலைமை தணிக்கை குழு உறுப்பினர்,பரமக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் குணா,இளைஞரணி நிர்வாகி காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



