மாற்றுத்திறனாளிகள்,வயது முதிர்ந்தோர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய தமிழ்நாடு “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்”:முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியடைந்த பயனாளி!!!
அரசின் பல்வேறு சேவைகளை மக்களின் வீடு தேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக,மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு,அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி,சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 12.08.2025 அன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு,கள அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றது.மின்னணு எடைத்தராசு e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களை பாதுகாப்பாக தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாய விலைக்கடை விற்பனையாளர்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.இத்திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 775 நியாயவிலைக் கடைகளில் தகுதிவாய்ந்த 31977 குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்று வரும் பயனாளி தெரிவிக்கையில்:-
என்னுடைய பெயர் அழகு சுந்தரம் பிள்ளை,எனது சொந்த ஊர் கடலாடி வட்டம்,கொண்டு நல்லான்பட்டி கிராமம் ஆகும்.எனக்கு வயது 73 ஆகிறது.நான் எனக்கு தேவையான குடிமைப் பொருட்களை எங்கள் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பெற்று வந்தேன்.வயது முதிர்வின் காரணமாக என்னால் நியாய விலைக் கடைக்கு சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளவது மிகவும் சிரமமாக இருந்தது.இந்த நேரத்தில் தான் தாயுமானவர் திட்டம் தொடர்பாக நான் கேள்விப்பட்டேன்.இது தொடர்பாக நான் பொருட்கள் வாங்கும் நியாயவிலைக் கடையில் உள்ள பணியாளர்களிடம் கேட்டறிந்தேன்.அப்போது எனக்கும் இந்த திட்டத்தின் மூலம் எனது வீட்டிற்கே வந்து குடிமைப்பொருட்கள் வழங்கப்படும் என பணியாளர்கள் தெரிவித்தார்கள்.இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது தற்போது எனது வீட்டிற்கே வாகனம் மூலம் நியாயவிலைக் கடையிலிருந்து குடிமைப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.என்னைப் போன்ற வயது முதிர்ந்தோர்களின் சூழ்நிலையை உணர்ந்து இத்திட்டத்தை அறிவித்து அதனை செயல்படுத்தி எங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் சார்பிலும்,என்னைப் போன்ற வயது முதிர்ந்தோர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.



