தமிழகம்மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்வதற்கான உதவி மையங்கள்:மாவட்ட தேர்தல் அலுவலர்/கலெக்டர் ஆய்வு!!!

இராமநாதபுரம் மாவட்டம்,இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்வதற்கான உதவி மையங்கள் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட கலெக்டர் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம்,தேவிபட்டினம்,ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், திருப்பாலைக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த வாக்காளர்களுக்கான கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்வதற்கான உதவி மையங்கள் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு வாக்காளர்களுக்கு படிவம் பூர்த்தி செய்வதற்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டும் என பணியாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார்.



