தமிழகம்மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பங்கேற்பு!!!

இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் பாரதிநகர் பீமாஸ் வைஸ்ராய் கூட்ட அரங்கில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இன்பா A.N.ரகு முன்னிலை வகித்தார்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மண்டபம் சம்பத் ராஜா வரவேற்றார்.தி.மு.க இளைஞரணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48-வது பிறந்த நாளை (நவ.27) முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்,2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பேசினார்.மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கவுன்சிலர் ரமேஷ் கண்ணா உட்பட மாவட்ட,நகர,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள்,நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.



