தமிழகம்மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரத்தில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை இருவார விழா விழிப்புணர்வு வாகனம்:கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!!!

இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குடும்ப நலத்துறை மூலம் “ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை இருவார விழாயொட்டி” விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு வாகனம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை அவசியம் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வரும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.சிவானந்தவள்ளி,கண்காணிப்பு அலுவலர்கள் பக்கீர் முஹம்மது,சாகுல் ஹமீது,தாய்,சேய் நல அலுவலர் பத்மா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



