வேப்பூரில் பயிர் காப்பீடு வழங்க கோரி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரைநிர்வாண போராட்டம் நடத்தினர்.
வேப்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் மக்காச் சோளம் மரவள்ளி நெல் கம்பு வரகு ஆகிய பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றன.இதில் கடந்த ஆண்டு மக்காச்சோளம் பெயருக்கு பயிர் காப்பீடு செய்தனர் அப்போது மழை பெய்ததா பயிர்கள் நாசமாகி விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது அப்போது விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனர்.ஆனால் ஒரு வருடம் முடிந்த நிலையில் இதனால் வரை காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை இது குறித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்திய பலமுறை மனு கொடுத்தும் இது நாள் வரை காப்பீட்டுத் தொகை வழங்காததால் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் பெரியநெசலூர் கவியரசு,வரம்பனூர் ராஜா, காஞ்சிராங்குளம் ஸ்டாலின்,ரெட்டாகுறிச்சி மணிண்டன் ஆகியோர் ஏற்பாட்டில்
வேப்பூர் பஸ் நிலையத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி கோஷமிட்டபடி சென்று வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி கோஷமிட்டனர்.
பின்னர் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலக முன்புறம் உட்கார்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து வேப்பூர் மண்டல துணை வட்டாட்சியர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,நல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கீதா,இன்சூரன்ஸ் கம்பனி நிர்வாகிகள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் முடிவில் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் காப்பீட்டுத் தொகை அனுப்பி வைக்கப்படும் என கூறியது தொடர்ந்து கலைந்து சென்றனர்.



