கீழக்கரை நகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகள் சிறைபிடிப்பு!!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் படி,கீழக்கரை நகராட்சி சேர்மன் பை.செஹானஸ் ஆபிதா,துணை சேர்மன் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான்,கமிஷனர் கிருஷ்ணவேணி ஆகியோர்களின் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரிந்த 34 எண்ணிக்கையிலான கால்நடைகள் சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா நகராட்சி பணியாளர்களால் பிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளது.

பிடிக்கப்பட்ட கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 பிரிவு 292 (7) மற்றும் (6) -ன் கீழ் கால்நடை ஒன்றுக்கு ரூ. 5000/- செலுத்தி விடுவித்துக் கொள்ளலாம்.
மேலும் 48 மணி நேரத்திற்கு அபாரதம் செலுத்தி மீட்கப்படாத கால்நடைகளை மேற்குறிப்பிட்ட விதிகள் 2023 பிரிவு 292 (9)-ன் கீழ் பகிரங்க பொது ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் மீண்டும் தொடர்ந்து இதுபோன்று கால்நடைகளை பொதுமக்கள் அச்சுறுத்தும் வண்ணம் தெருக்களில் விடும் உரிமையாளர்கள் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.



