திருஉத்திரகோசமங்கை,ஏர்வாடி,இதம்பாடல்,சிக்கல் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு:நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிப்பு!!!


இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் படி,உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் இராமநாதபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.ஜெயராஜ் இராமேஸ்வரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.முருகன் கீழக்கரை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் ஆர்.எஸ்.மங்கலம் உணவு பாதுகாப்பு அலுவலர் அ.கர்ணன் ஆகியோர் இணைந்து திருஉத்திரகோசமங்கை,ஏர்வாடி,இதம்பாடல்,சிக்கல் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 2 கடைகளில் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.அந்தக் கடையை பூட்டி தலா 75,000 அபராதம் விதிக்கப்பட்டது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டு தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



