தமிழகம்மாவட்டச் செய்திகள்

இராமநாதபுரத்தில் வக்கீல்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்:இபைலிங் முறையை ரத்து செய்யக்கோரி நடைபெற்றது!!!

நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் அருகே வக்கீல்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதிலும் நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே அனைத்து வக்கீல்கள் சங்கம் சார்பில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு தலைவர் அன்பு செழியன் தலைமை வகித்தார்.செயலாளர் முத்து துரைச்சாமி முன்னிலை வகித்தார்.பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.முத்து வக்கீல் குணசேகரன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில்,இராமநாதபுரம்,இராமேஸ்வரம்திருவாடானை,முதுகுளத்தூர்,கமுதி,பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150 க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button