தமிழகம்மாவட்டச் செய்திகள்

இராமநாதபுரத்தில் ராயல் ஓக் பர்னிச்சர் கிளை திறப்பு:சர்வதேச தயாரிப்புகள் அறிமுகம்!!!

இந்தியாவின் நம்பர் 1 பர்னிச்சர் பிராண்டு ராயல் ஓக் பர்னிச்சர் கிளையை திறந்து சர்வதேச நாடுகளின் தயாரிப்புகளின் விற்பனையை இராமநாதபுரத்தில் தொடங்கியது.

அதன் முதன்மை ஸ்டோரினை அறிமுகப்படுத்தி அதன் திறப்பு விழாவில் இராமநாதபுரம் இன்கார்ப்ரேஷன் பிரைவேட் லிமிடெட் தலைவர் ஸ்ரீ விஜய் சுப்ரமணியம், நிர்வாக இயக்குநர் ஸ்ரீ மதன் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மக்களுக்கு சர்வதேச உயர் தர பர்னிச்சர் தயாரிப்புகளை,எளிய முறையில் பெறும் வசதியை இந்த முதன்மை ஸ்டோர் உருவாக்கி உள்ளது. பிரான்சைஸ் தலைவர் கிரண் சபாரியா,விஷுவல் மெர்ச்சண்டைசிங் தலைவர்
தம்மையா கோடேரா,தமிழ்நாடு -கேரளா பிராந்தியத் தலைவர் ரஞ்சித் கப்பட்டு,பிரான்சை மேலாளர், பிரான்சைசி பங்குதாரர்கள் சுரேஷ் குமார்,இராமநாதபுரம் நோபல் ரூட்ஸின் நிர்வாகிகள் தீபக்,ஜெகன்,கார்த்திக் உள்ளிட்ட ராயல் ஓக் குழுவினர் கலந்து கொண்டனர்.

வெற்றிகரமான வணிக விரிவாக்கம் மாநிலத்தில் பல ஆண்டுகளாக ராயல் ஒக் பிராண்ட் உருவாக்கிய பரவலான வேலை வாய்ப்புகளை உறுதி செய்துள்ளது. விற்பனையாளர்கள் பலர் கிளை பங்குதாரர்களின் எதிர்கால வணிக விரிவாக்க கதவுகளைத் திறந்துள்ளது. விசாலமான இக்கடையில் வீட்டின் ஒவ்வொரு இடத்திற்கும் பொருத்தமான பல்வேறு வகை பர்னிச்சர்கள்,லிவிங் ரூம், படுக்கையறை,உணவுக்கூடம்,படிப்பு அறை,வெளிப்புற தேவைகள்,வீட்டு அலங்காரம்,தரை விரிப்புகள் அனைத்தும் 10 ஆயிரம் சதுர அடி பரப்பிலான ஒரே கூரையின் கீழ் கிடைக்கிறது.இராமநாதபுரம் மக்கள் விரும்பும் பாணி,நடையில் சர்வதேச தயாரிப்புகள் இங்க கிடைக்கிறது. இத்தயாரிப்புகளை உயர் வகுப்பினர் மட்டுமின்றி நடுத்தர வகுப்பு மக்களுக்கு நியாயமான விலையில் இங்கு தேர்வு செய்து வாங்கும் வசதி எளிதாக்கப்பட்டுள்ளது.

ராயல் ஓக் பர்னிச்சர் நிறுவனத் தலைவர் விஜய் சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பிளாக்ஷிப் ஸ்டோர் திறப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும்,பெருமையும் அளிக்கிறது.இந்தியா,ஐக்கிய அரேபிய எமிரேட் நாடுகள் முழுவதும் 200க்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் செயல்பட்டு வரும் நிலையில் இந்த புதிய ஸ்டோர் திறப்பு எங்கள் சேவையை மேலும் வலுப்படுத்தும் என்பது முக்கிய முன்னேற்றமாகும்.இப்பகுதியில் துரிதமாக அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யவும்,உயர் தர தயாரிப்புகளை வழங்கவும் நாங்கள் உறுதியாக செயல்படுகிறோம்.

இராமநாதபுரம் மக்கள் குறைந்த செலவில் சர்வதேச பர்னிச்சர்களை
தரமான தயாரிப்பில் பெறுவதில் ஆர்வம் காட்டுவர் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.இச்சந்தையின் வளர்ச்சியை நாங்கள் மிக நேர்மறையாக காண்கிறோம்.வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு இல்லத்தை அழகாக வடிவமைக்க சரியான பர்னிச்சர்களை தேர்ந்தெடுக்க உதவ ராயல் ஓக் ஆவலுடன் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button