இராமநாதபுரத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக சங்க அங்கீகாரத் தேர்தல்!!!

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் மாநிலம் முழுவதும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.வாணிபக் ஊழியர்களின் ஊதியம்,தொழில் தகராறுகள்,பணிச்சுமை,மிகை ஊதியம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான பேச்சு வார்த்தையில் அரசுடன் தொழிற்சங்கங்கள் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தை தோ்ந்தெடுக்கும் தோ்தல் நீதிமன்ற உத்தரவுப்படி 2005 ஆம் ஆண்டுக்கு பின் இன்று நடைபெற்றது.இத்தேர்தலில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (திமுக) அண்ணா தொழிற்சங்கம் (அதிமுக) சிஐடியு (மார்க்சிஸ்ட்),ஏஐடியுசி (இந்திய கம்யூ), ஐஎன்டியுசி (காங்கிரஸ்,பிஎம்ஸ் (பாரதிய மஸ்தூர் சங்) உள்பட 8 சங்கங்கள் போட்டியிட்டன.
இராமநாதபுரத்தில் நடந்த தேர்தலில் 74 தொகுப்பூதிய ஊழியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் இன்று நடந்த தேர்தலில் தங்கள் சங்க அங்கீகரித் தேர்தலில் ஆவலுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.வாக்குகள் இன்று மாலை 5 மணிக்கு பின் எண்ணப்படும்.இதன் முடிவுகள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு மொத்த வாக்குகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என தொமுச மாவட்ட செயலாளர் ஆர்.மலைக்கண்ணு கூறினார்.



