சென்னை தலைமைச் செயலகத்தில் நலிந்த பத்திரிகையாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகள்:முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்-இராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பத்திரிகையாளர்கள் பெற்றுக் கொண்டனர்!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்கள் இதில் ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பித்த மோகன் (தீக்கதிர்),ராமு(மக்கள் குரல்),சிவசங்கரன் (தினசங்கு) ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் ராமு மற்றும் மோகன் முழுமையாக பத்திரிகை துறையில் ஓய்வு பெற்றும்,சிவசங்கரன் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விருப்ப ஓய்வு கேட்டும் அரசிடம் விண்ணப்பித்திருந்தனர்.மனுவை பத்திரிகையாளர்கள் அங்கீகார குழுவினர் பரிசீலனை செய்து ஓய்வூதியம் வழங்க அனுமதித்தனர்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமு மற்றும் சிவசங்கரனுக்கு பத்திரிகைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நலிந்த பத்திரிகையாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய ஆணைகளை வழங்கினார்.

மேலும் ஒருவரான மோகன் என்ற பத்திரிகையாளருக்கு இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஓய்வூதிய ஆணை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விதிகளை மீறினால் பென்சன் ரத்து:-
தமிழ்நாடு அரசின் மகத்தான திட்டங்களில் ஒன்றான இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மேற்கண்ட மூவரும் இனி பத்திரிகையாளர்களுக்கான எந்த வித அரசு சலுகைகளையும் பெற முடியாது.அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது.வேறு எந்த பத்திரிகையிலும் உறுதிபடுத்தப்பட்ட ஊழியராக பணியாற்ற கூடாது.இதில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விருப்ப ஓய்வு பெற்று அரசின் பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் பெயரிலோ,தங்களது மனைவி பெயரிலோ எந்தவொரு பத்திரிகையிலும் பணியாற்ற கூடாது.மேலும் இனி வரும் காலங்களில் மேற்கண்ட நபர்கள் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களாகவே கருதப்படுவர்.இவர்கள் மூவரும் மேற்கண்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டால் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு ஓய்வூதியத்தை நிறுத்த பரிந்துரை செய்து இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நடவடிக்கை மேற்கொள்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே மூர்த்தி,ரெத்தின குமார் ஆகிய இருவரும் தமிழக அரசின் பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெற்று வருவதால் இத்திட்டத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 5 பத்திரிகையாளர்கள் பலன் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பத்திரிகையாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவர்களது வாழ்வாதாரத்தை பேணி பாதுகாத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு பத்திரிகையாளர்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.



