திருப்புல்லாணி யூனியனில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலம்:நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்:வழி நெடுகிலும் பெண்கள் உற்சாக வரவேற்பு!!!








தி.மு.க தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க,தலைமை அறிவுறுத்தலின் பேரில்,தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.








அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியனில் தி.மு.க இளைஞரணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்றிய செயலாளர்கள் உதயக்குமார் (திருப்புல்லாணி மேற்கு),நாகேஸ்வரன் (திருப்புல்லாணி கிழக்கு) ஆகியோர் ஏற்பாட்டில் கோலாகலமாக நடைபெற்றது.







இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி யூனியன் திருப்புல்லாணி,சேதுக்கரை,கோரைக் கூட்டம்,பஞ்சதாங்கி,தாதனேந்தல்,காஞ்சிரங்குடி,லெட்சுமிபுரம்,அலவாக்கரைவாடி ஆகிய பகுதிகளில் திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர் உதயக்குமார்,கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன் ஆகியோர்களது ஏற்பாட்டில் தி.மு.க இளைஞரணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-




இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி.இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உதயசூரியனுக்கு அதிக வாக்குகளை தந்து 2வது முறையாக தமிழ்நாடு முதல்வராக முக.ஸ்டாலினை அமர வைக்க அனைவரும் பாடுபட வேண்டும்.மகளிர்க்கு முன்னுரிமை கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியது திராவிட மாடல் அரசுதான்.அதற்கு பக்கபலமாக அனைவரும் இருக்க வேண்டும்.இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் 2 லட்சம் பயனாளிகளுக்கு இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
















இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் திருப்புல்லாணி முன்னாள் யூனியன் தலைவர் ச.புல்லாணி,ஒன்றிய கலை இலக்கிய அணி ராஜேந்திரன்,திருப்புல்லாணி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விவேக் ஆதித்தன்,தி.மு.க வர்த்தக அணி மாவட்ட தலைவர் பி.எம்.கெஜி கஜேந்திரன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தமூர்த்தி,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜ்குமார்,பத்திர எழுத்தர் குமார்,திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.ஏ.பி.என்.அருண் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக எதிர்வரும் 2.1.2026 அன்று நடைபெறும் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோவில் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.



