பெங்களூரு தமிழ்ப் புத்தகத் திருவிழா இனிதே நிறைவு!!!

பெங்களூரில் நடைபெற்று வந்த தமிழ்ப் புத்தகத் திருவிழா தமிழ்ச் சான்றோர்க்கு விருது வழங்கிய நிகழ்வுடன் இனிதே நிறைவு பெற்றது.
பெங்களூரில் கடந்த டிச. 5 ஆம் தேதி தொடங்கி, 14 ஆம் தேதி வரை கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தகத் திருவிழா நடைபெற்றது. 10 ஆம் நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) அன்று பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த 42 தமிழ்ச் சான்றோர்க்கு விருது வழங்கும் நிகழ்விற்கு பிறகு,சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னனின் ஏற்புரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நான்காமாண்டு தமிழ் புத்தக திருவிழா பெங்களூரு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வீதியில் உள்ள தி இன்ஸ்டிடியூட் ஆப் இன் ஜினியர்ஸ் வளாகத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கி நேற்று வரை பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர் தலை மையில் நடைபெற்ற தொடக்க விழாவில் இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவரும், ஒன்றிய விண்வெளி துறை முதன்மை செயலாளருமான டாக்டர் வி.நாராயணன் குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து கடந்த 6ம் தேதி பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர் எழுதி யுள்ள ‘கருவில் இருந்து கலெக்டர் வரை’ என்ற நூல் அறிமுக விழா நடைபெற்றது. தார்வார் மாவட்ட ஆட் சியர் திவ்யாபிரபு, நூலை அறிமுகம் செய்து உரை ஆற்றினார். 3 ஆயி ரம் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.100 என்ற வகையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பரிசு சீட்டுகளை டாக்டர் ராம்பிரசாத் மனோகர் வழங்கினார்.
அதை தொடர்ந்து கன்னட அரங்கம் நடைபெற்றது. மாநில சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், கன் டை வளர்ச்சி ஆணைய முன்னாள் தலைவரும் இலக்கிய எழுத்தாளரு மான எஸ்.ஜி.சித்தராமையா உள்பட பல கன்னட அறிஞர்கள் கலந்து கொண்டனர். மாலை நடைபெற்ற சிந்தனை களம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் ஆணையர்கள் மு.நடேசன் மற்றும் வி.பி.ஆர்.இளம்பரிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்று நடைபெற்ற மாணவர்கள் தமிழ் நூல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில கலால்துறை ஆணையர் ஆர். வெங்கடேஷ்குமார் பரிசுகள் வழங் கினார். மூன்றாம் நாள் விழாவில் இராணுவ விஞ்ஞானி டாக்டர் டில் விபாபு எழுதியுள்ள ‘வெள்ளோட்டம் வெல்லட்டும்’ என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில் சாமி அண்ணாதுரை நூலை வெளி விட்டார். கடந்த 7ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை தினமும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை பள்ளிகள் மற்றும் முதல்நிலை, புகுமுக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மொழி திறன், கேள்விக்கென்ன பதில், கவிதை, படம் பார்த்து கதை சொல்லுதல். தமிழோடு விளையாடு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி அரங்கில் பரிசு வழங்கப்பட்டது. கடந்த பத்து நாட்கள் நடைபெற்ற தமிழ் புத்தக திருவிழா ஞாயிற்றுக்கிழமை விருதுகள் வழங்கும் நிகழ்வுடன் இனிதே நிறைவு பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை பகல் 3 மணிக்கு நடைபெற்ற நிறைவு விழாவில் சங்க செயலாளர் அ.வீ.மதியழகன், பொருளாளர் தினகரவேலு, துணைத்தலைவர் வி.வெங்கடோன், துணை செயலாளர்கள் தண்டபாணி, ஆர்.எம்.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி எஸ்.வெங்கடேசன், கட்டுமானதொழில் பத்திரிகையின் ஆசிரியர் சிந்துபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் கிரித்திகசரண், சமூக செயற்பாட்டாளர் ஆஷா சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழ்ச் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பெங்களூருவில் வாழும் 105 வயது திராவிட இயக்க மூத்த முன்னோடி வி.மு.வேலுவுக்கு கர்நாடக தமிழ்ப் பெருந்தகை விருது வழங்கப்பட்டது. மேலும் 42 பேருக்கு கர்நாடக தமிழ் ஆளுமை விருது வழ கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில தொழில் துறை முதன்மை செயலாளர் டாக்டர் எஸ். செல்வகுமார் கலந்து கொண்டு, விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
சிறப்புரையில், கர்நாடக மாநில தொழில் துறை முதன்மைத் செயலாளர் டாக்டர் எஸ். செல்வகுமார் பேசும் போது, கர்நாடக மாநிலத்தில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மாநிலத்தில் வாழும் தமிழர்களின் வீடுகளுக்கு தமிழ் மொழியைக் கொண்டு சேர்க்கும் முயற்சியை கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் மேற்கொண்டு வருகிறது பாராட்ட வேண்டிய ஒன்று.
அவர்கள் முயற்சிக்கு நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில மொழி கல்வியில் சேர்க்கிறார்கள். இது அவசியம் என்றாலும் நமது மொழியை மறக்காமல் இருக்க பிள்னைகளுக்கு தமிழ் சொல்லி கொடுக்க வேண்டும்.
தமிழர்கள் உலகின் எங்கு வாழ்ந்தாலும் கடுமையான உழைப்பவர்கள். வாழும் நாட்டிற்கும், மாநிலத்திற்கும், பகுதிக்கும் நன்றியுடன் இருப்பார்கள், அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்களும் வாழ்கின்றனர். கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் தொடர்ந்து வெற்றியுடன் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை நடத்த வாழ்த்துகிறேன் என்றார்.



