போகலூர் உண்டு உறைவிடப்பள்ளியில் பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு!!!

இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் சேதுராமன் போகலூரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா என்.எஸ்.சி.பி.ஏ.வி உண்டு உறைவிடப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.


மாணவர்களின் கற்றல்,கற்பித்தல் திறன் பயிற்சி,சுற்றுப்புற சூழல்,மாணவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.மேலும் அரையாண்டு தேர்வு எழுதும் மாணவர்களிடம் சென்று வினாத்தாள் முறையாக வழங்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தார்கள்.

மேலும் விடுதியில் காலை உணவு,கழிப்பறை,பள்ளி பராமரிப்பு,மாணவர்களின் கல்வி வளர்ச்சி பற்றி மாணவர்களிடமே நேரில் விளக்கம் கேட்டறிந்தார்.பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் தலைமை ஆசிரியரிடமும் உதவி ஆசிரியரிடமும் கேட்டு பதிவுசெய்தார்.இறுதியில் ஆசிரியர்களிடத்தில் பள்ளி வளர்ச்சியடையவும்,மாணவர்களின் கல்வி மேன்மையடைய செய்ய வேண்டும் என்று அறிவுறை கூறிச்சென்றார்.இந்நிகழ்வின் போது பள்ளியின் நிர்வாகி டாக்டர் ச.மாடசாமி உடனிருந்தார்.



