தொண்டி எம்.ஆர்.பட்டினம் 1வது வார்டில் மழைநீருடன் கலந்த கழிவுநீர்:நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் பேரூராட்சி நிர்வாகம் சீர்செய்ய வேண்டும்:ம.ம.க நிர்வாகி அலாவுதீன் கோரிக்கை!!!

இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி பேரூராட்சி மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி அலாவுதீன் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அந்த கோரிக்கையில் அவர் கூறியதாவது:-
இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி பேரூராட்சி எம்.ஆர்.பட்டினம் 1வது வார்டு
தொடர் மழை காரணமாக தெருக்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியிருந்தது.அதனை தொண்டி பேரூராட்சி நிர்வாகம் மோட்டர்களை வைத்து தண்ணீரை கடலுக்கு வெளியேற்றுமாறு தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கையை வைத்ததன் அடிப்படையில் கொஞ்சம் அகற்றினர்.அதை முழுமையாக அந்த தெருவில் இருக்கும் தண்ணீரை அகற்றாமல் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.இந்த தெரு வழியாக பள்ளிக்கூடம் செல்ல குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.அந்த தெருவில் இருக்கும் மக்களும் வெளியில் வர ரொம்ப சிரமமாக இருக்கிறது.
தண்ணீரில் சாக்கடை நீரும் கலந்திருப்பதால் நோய் தொற்றும் அபாயமும் நிலவுகின்றது.ஆகையால் இதனை தொண்டி பேரூராட்சி நிர்வாகம் மிகவும் மெத்தனப் போக்கோடு நடந்து கொள்கிறார்கள் பொய்யாக படங்களை எடுத்து முழுமையாக வேலை பார்த்து விட்டோம் என்று அதிகாரிகளுக்கு தவறான தகவல் கொடுக்கிறார்கள் மிக மோசமாக இருக்கும் இந்த சாலையை உடனடியாக இந்த தெருவை சுத்தப்படுத்தி தருமாறு தெரு மக்கள் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.



