இராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி:மாவட்ட முதன்மை நீதிபதி மெஹபூப் அலிகான் கொடியசைத்து துவக்கி வைத்தார்!!!



இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம் லிமிடெட்) காரைக்குடி மண்டலம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்,மாவட்ட முதன்மை நீதிபதி மெஹபூப் அலிகான் கொடியசைத்து வைத்தார்.

இப்பேரணியில் இராமநாதபுரம் இராமநாதபுரம் டி.ஆர்.ஓ வ.சங்கர நாராயணன்,இராமநாதபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன்,துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன்,கேணிக்கரை இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வரன்,இராமநாதபுரம் ஆர்.டி.ஓ ஆனந்த்,பிரேக் இன்ஸ்பெக்டர் தங்கராஜ்,இராமநாதபுரம் டிராபிக் இன்ஸ்பெக்டர் சிவா,சப் இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன்,காரைக்குடி மண்டல பொது மேலாளர் ரவிக்குமார்,துணை மேலாளர்கள் நாகராஜன்,தமிழ்மாறன்,உதவி மேலாளர்கள் சண்முக சுந்தரம்,பாலமுருகன்,ரவி,கிளை மேலாளர்கள் தனபால்,தெய்வேந்திரன்,ரத்தினம்,குமார வேலு,சிவகார்த்திகேயன்,விஜய ராஜா,தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகரத்தினம்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கி டிப்ளாக் வழியாக பாரதிநகரில் நிறைவு பெற்ற இப்பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



