தமிழகம்மாவட்டச் செய்திகள்

திரு உத்திரகோசமங்கை ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை:இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

பொது (பல்வகை) துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண்: 154 பொது (பல்வகை)த் துறை நாள் : 03.09.2020-ன் படி,இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை வட்டம்,திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 02.01.2026 அன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை ஆகவும்,அதனை ஈடு செய்யும் பொருட்டு 10.01.2026 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.மேலும்,இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 10.01.2026 அன்று வழக்கம்போல் இயங்கும்.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால்,02.01.2026 வெள்ளிக்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம்,சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button